×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பைட் க்ளப் படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு: படக்குழு அறிவிப்பு.!

பைட் க்ளப் படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு: படக்குழு அறிவிப்பு.!

Advertisement

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பைட் கிளப். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, விஜயகுமாரின் பைட் கிளப் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள படம், வரும் 15ம் தேதி திரையில் வெளியாகிறது.

படத்தின் ராவண கூட்டம் என்ற பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தை தணிக்கைக்குழு கவனத்திற்கு படக்குழு அனுப்பி இருந்தது. படத்திற்கு தணிக்கைக்குழு A சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 

படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகள் உண்மையான நிகழ்வுகளை போல காண்பிக்கப்பட்டு இருப்பதால், ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakumar #tamil cinema #பைட் கிளப் #G Squad
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story