தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் விவகாரம்: பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர் வெட்டிக்கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரின் துணை நடிகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Famous vijay tv serial actor murdered due to illegal relationship Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரின் துணை நடிகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் துணை நடிகராக நடித்து வந்தவர் செல்வரத்தினம் (45). இலங்கை தமிழரான இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சென்னை எம்.ஜி.ஆர் நகர் வள்ளல்பாரி தெருவில் வசித்துவந்தார்.

நடிப்பு மட்டுமின்றி இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வீடு உள் கட்டமைப்பு காண்ட்ராக்டர் போன்ற வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் செல்வரத்தினதின் வீட்டிற்கு வந்த நான்கு பேர் செல்வரத்தினத்தை வீட்டு வாசலில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.

Crime

இதில் செல்வரத்தினம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து மர்மநபர்கள் நான்கு பெரும் அங்கிருந்து தப்பி ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்துவந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இலங்கையில் இருந்து வந்த செல்வரத்தினம் விருதுநகர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது அதே முகாமில் தங்கியிருந்த விஜயகுமார் என்பவரின் மனைவி டயானாவுடன் நெருங்கி பழக்க, அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்துகொண்ட விஜயகுமார் தனது மனைவி மற்றும் செல்வரத்தினத்தை பலமுறை எச்சிரித்துள்ளார். ஆனாலும் இருவரின் கள்ளக்காதலுக்கு தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் விருதுநகர் அகதிகள் முகாமில் இருந்து சென்னை வந்து செல்வ ரத்தினத்தை வெட்டி படுகொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story