தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"இந்த காரணத்தினால் தான் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டேன்" பிரபல நடிகை சரிதாவின் பேட்டி..

இந்த காரணத்தினால் தான் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டேன் பிரபல நடிகை சரிதாவின் பேட்டி..

Famous tamil actress interview Advertisement

தமிழ் சினிமாவில் 70களில் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகை சரிதா. இவரது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்று ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் திரைப்படங்களில் நடிப்பது, நடிப்பு போல் தோன்றாது அப்பிடியே வாழ்வார் என்று கூட சொல்லலாம்.

saritha

அந்த அளவிற்கு இவரது நடிப்பு திறமை மக்களுக்கு பிடித்திருந்தது. இதன் மூலம் பல வெற்றி திரைப்படங்களில் பிரபல நடிகர்களின் ஜோடியாக நடித்து இன்று வரை மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்திருக்கிறார்.

இது போன்ற நிலையில், நடிகை சரிதா திடீரென்று திரைப்படங்களில் எதுவும் நடிக்காமல் தமிழ் சினிமாவில் இருந்து விலகி விட்டார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இதன்படி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'மாவீரன்' திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை சரிதா கலந்து கொண்ட பேட்டியில், இதுவரை திரைப்படங்களில் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.  அவர் கூறியதாவது, "எனது குழந்தைகளின் வாழ்க்கை தான் முக்கியம். அவர்களுக்காக தான் நான் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டேன்" என்று கூறியுள்ளார். இப்பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#saritha #actress #movie #tamil #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story