×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.. பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்..

பிரபல தமிழ் சீரியல் நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Advertisement

பிரபல தமிழ் சீரியல் நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

தமிழில் பல்வேறு தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வெங்கடேஷ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர்தான் இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

அதை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துவரும் இவர், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே மற்றும் பாரதி கண்ணம்மா ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் அவர்கள் இன்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நடிகர் வெங்கடேஷின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்திய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளநிலையில், சின்னத்திரை பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் பலர், வெங்கடேஷின் மறைவுக்கு அவருடைய புகைப்படத்தை தங்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#RIP Venkatesh #Tamil Serial Actor #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story