×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேசிய விருது பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு.!

பிரபல பாடகரும், மேடை இசைக்கலைஞருமான கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.

Advertisement

பிரபல பாடகரும், மேடை இசைக்கலைஞருமான கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன்.  பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. 

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட ஆர்கெஸ்ட்ராவை வைத்திருந்த கோமகன் கொரோனா அச்சுறுத்தலால் மேடை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் தனது குழுவோடு பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 50 சதவீத கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் கோமகன் கடந்த 12 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தார். இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, தயாரிப்பாளர் பாபுராஜா ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் நிலையில் பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர வைத்திருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#komagan #Passed away #singer
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story