×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டின் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய பிரபல மலையாள நடிகர்.! என்ன காரணம்.?

வீட்டின் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய பிரபல மலையாள நடிகர்.! என்ன காரணம்.?

Advertisement

பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர் நிவின் பாலி நடித்துள்ள "ஆக்ஷன் ஹீரோ பைஜூ" என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும், இபா மற்றும் கர்மானி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியை அடுத்த களமச்சேரியில் உள்ள தனது வீட்டின் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

மனஉளைச்சல் மற்றும் குடும்ப காரணங்களால் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ND prasath #actor #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story