திடீர் மாரடைப்பு.. பிரபல இயக்குனர் மரணம்.! சோகத்தில் கலங்கும் திரையுலகம்!!
மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். தொடர்ந்து அவர் ராவண கோட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இயக்குனர் விக்ரம் சுகுமாரன், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அடுத்த படத்திற்கான முயற்சி
மேலும் அவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் என்ற படத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு துணையாகவும் பணியாற்றியுள்ளார். இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேற்று மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையை கூறிவிட்டு சென்னை திரும்புவதற்காக பேருந்து நிலையம் வந்துள்ளார்.
இதையும் படிங்க: கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
திடீர் மாரடைப்பால் மறைவு
அப்பொழுது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விக்ரம் சுகுமாரனின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.