×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தல அஜித்தை சினிமாவில் அறிமுகப்படுத்திய பிரபல இயக்குனர், சன்டிவியில் பிரமாண்ட சீரியல்! சந்தோஷத்தில் ரசிகர்கள்!

famous director suntv serial

Advertisement


தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சன் டீவியின் இந்த வளர்ச்சிக்கும் புகழுக்கும் முக்கிய காரணமாக இருப்பது அதில் வரும் சீரியல்கள்தான்.

முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்து வந்தனர். ஆனால், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். இந்தநிலையில் சன் டிவியின் புதிய சீரியலாக ரன் எனும் பிரமாண்ட சீரியல் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

வேறொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் ஹீரோயினாக நடித்த சரண்யா தான் இந்த ரன் சீரியலிலும் ஹீரோயினாக நடிக்கிறார். அதேபோல் சன்டிவியில் ஹிட்டான தெய்வமகள் சீரியலின் ஹீரோ பிரகாஷ் தான் இதிலும் ஹீரோவாக நடிக்கின்றார். இந்த சீரியலில் பிரபல சினிமா நடிகர்களும் நடிக்கின்றனர்.

நிழல்கள் ரவி, ராஜ் கபூர் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். நடிகர் தல அஜித்தின் முதல் படமான "அமராவதி" படத்தை இயக்கிய, இயக்குனர் செல்வா தான் இந்த ரன் சீரியலை இயக்குகிறார். தற்போது ரசிகர்கள் ரன் சீரியல் ஒவ்வரு எபிசோடும் சினிமா போலவே இருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இதுபோன்ற சீரியலை எந்த தொலைக்காட்சியிலும் பார்த்ததில்லை என ரன் சீரியலை புகழ்ந்து தள்ளுகின்றனர் ரசிகர்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#run #serial #Sun tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story