அமெரிக்காவில் உல்லாசமாக சுற்றி திரியும் பிரபல இயக்குனர்... ஆபாச நடிகைகளுடன் செல்ஃபி எடுத்து அலப்பறை.!
அமெரிக்காவில் உல்லாசமாக சுற்றி திரியும் பிரபல இயக்குனர்... ஆபாச நடிகைகளுடன் செல்ஃபி எடுத்து அலப்பறை.!

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர். சர்ச்சைக்குரிய மற்றும் திரில்லர் திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவின் சர்ச்சைக்குரிய இயக்குனராக விளங்கி வருபவர்.
இவரது இயக்கத்தில் உருவான ரங்கீலா சத்யா கம்பெனி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். இவர் சூர்யா நடிப்பில் உருவான ரத்த சரித்திரம் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களின் மூலமாகவும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருபவர் ராம் கோபால் வருமா.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருக்கும் இவர் அங்கிருக்கும் ஆபாச பட நடிகைகளுடன் செல்பி எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். மேலும் வாழ்க்கை என்பது அமெரிக்காவில் இருப்பதைப் போல் அழகானதாக இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
பல ஆபாச நடிகைகள் ஆடை இல்லாமல் இருக்கும் போஸ்டர் உடன் இவர் இருக்கும் புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. இந்த புகைப்படங்கள் சர்ச்சையாகவும் ட்ரெண்டிங்காகவும் இருந்து வருகிறது. அமெரிக்கா சென்று உல்லாசமாக இருக்கிறார் என ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகின்றனர்.