×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லியோ படத்தை கிண்டலடித்து பதிவிட்ட பிரபல இயக்குநர்.. வைரலாகும் பதிவு.!

லியோ படத்தை கிண்டலடித்து பதிவிட்ட பிரபல இயக்குநர்.. வைரலாகும் பதிவு.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியான இப்படம் ரசிகர்களின் தொடர் பாராட்டை பெற்று வருகிறது. இது போன்ற நிலையில், தற்போது இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்று இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் ' லியோ' திரைப்படத்தின் பிளாஷ்பேக் உண்மையில்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக இயக்குனர் சி எஸ் அமுதன் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் ரத்தம் திரைப்படம் அமேசானில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் உண்மையான ஃபிளாஷ்பேக் இடம்பெற்றுள்ளது என்று கூறியிருக்கிறார். இப்பதிவை பார்த்த ரசிகர்கள் 'லியோ' திரைப்படத்தை தான் கிண்டல் செய்து பதிவு  செய்துள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leo #cinema #Kollywood #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story