விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.! இரத்தவெள்ளத்தில் துடிதுடிக்க பறிபோன உயிர்.!
famous actress car accident
பிரபல பாலிவுட் நடிகை காரின் மீது மோதி, விபத்தில் சிக்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகுல் நடித்த ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியவர் ஜரின் கான் . பாலிவுட் நடிகையான இவர் வீர், ரெடி, ஹேட் ஸ்டோரி-3 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தன்னுடைய மேனேஜர் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதுடன் தன்னை மிரட்டியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இந்நிலையில் ஜரீன் கான் நேற்று கோவாவுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அஞ்சுனா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது ஜரீன்கான் கார் ஒரு இடத்தில் நின்றுள்ளது. அப்பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துகொண்டிருந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து நடிகையின் கார் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.
பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த இளைஞரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.