சுற்றுலா சென்ற இடத்தில் பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்.!
சுற்றுலா சென்ற இடத்தில் பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்.!
கன்னட திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய ராகவேந்திரா. இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் பெற்று உள்ளார். நடிகர் விஜயராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா. விஜயராகவேந்திரா - ஸ்பந்தனா தம்பதிக்கு சவுர்யா என்ற மகன் உள்ளார்.
ஸ்பந்தனா 2016-ம் ஆண்டு வெளியான அபூர்வா என்கிற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் நடிகர் விஜய ராகவேந்திரா, சமீபத்தில் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலா சென்ற இடத்தில் விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்பந்தனாவை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுற்றுலா போன இடத்தில் பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.