விபச்சார பிரிவின் கீழ் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு? புகார் அளித்த பிரபல நடிகர்!
famous actor who complained to police about sri reddy

தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக
குற்றசாட்டி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி முன்னணி இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறினார்.
சென்னையில் தங்கி இருக்கும் அவர் இயக்குனர் சுந்தர்.சி, நடிகர் ஆதி ஆகியோர் மீதும் புகார்களை கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது நடிகர் வாராகி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திராவில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் அளித்து பணம் பறித்துள்ளார். சென்னையில் அது போன்று திரை உலகை சேர்ந்தவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.
பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பெண்களை அசிங்கம் படுத்துவதுபோல் உள்ளது. அவரது பேட்டி விபச்சாரத்தை ஒப்புக் கொண்டது போல் உள்ளது. எனவே விபச்சார சட்ட பிரிவின் கீழ் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் வாராகி புகார் அளித்துள்ளார்.