"விஜய் சேதுபதியை நினைச்சாலே பயம் வருது" உண்மையை ஓபனாக பேசிய பிரபலம்..
விஜய் சேதுபதியை நினைச்சாலே பயம் வருது உண்மையை ஓபனாக பேசிய பிரபலம்..
அட்லீ இயக்கத்தில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள படம் "ஜவான்". ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில், ஷாருக்கான், அட்லீ, விஜய்சேதுபதி, விக்னேஷ் சிவன், யோகிபாபு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய படத்தொகுப்பாளர் ரூபன், "விஜய் சேதுபதி தூக்கத்தில் கூட அந்த கதாப்பாத்திரத்தையே தான் யோசித்துக்கொண்டிருப்பார். அதனால் அவரை பார்த்தாலே பயம் வருகிறது. அவரது நடிப்பு பயங்கரமாக இருக்கும்.
படத்தின் எடிட்டிங்கின் போது ஷாருக்கான், நீளம் அதிகமாக இருந்தால் என்னுடைய காட்சிகளை வெட்டி விடுங்கள். மற்றவர்களின் காட்சிகளில் கை வைக்காதீர்கள்" என்று கூறினார், என்று ரூபன் பேசியுள்ளார்.