×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.! சிறு கவனக்குறைவால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகரின் 2வயது மகள்.!

famous actor daughter dead by small toy

Advertisement

இந்தி தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரதீஷ் வோரா. இவர் தற்பொழுது பியார் கி பாபட்என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

இவருக்கு 2 வயதில் ஒரு மகள் இருந்தாள்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதீஷ் வோராவின் மகள் வீட்டில் பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தது. அப்பொழுது பிளாஸ்டிக் பொம்மை ஒன்றை வாயில் வைத்தவாறு குழந்தை விழுங்கியுள்ளது. அது குழந்தையின் தொண்டையில் சிக்கி வெளியே வராத நிலையில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறு நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

 

இதனை கண்ட பிரதீஷ் மற்றும் அவரது மனைவி துடிதுடித்து கதறி உள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தையின் உடல் விமானம் மூலம் மும்பையிலிருந்து ராஜ்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து குழந்தை இறந்த தகவலை வெளியிட்ட அவர், குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிரதீஷ் தம்பதியினருக்கு ரசிகர்களும், சின்னத் திரை பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#prathish vora #dead #2 year daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story