×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவராக களமிறங்கும் பிரபல நடிகர் இவரா !. ரசிகர்கள் வரவேற்பு!!!.

famous-actor-acting-as-prabakaranrole

Advertisement

தமிழ் சினிமா உலகம், இப்போது வாழ்க்கை வரலாறு சார்ந்த திரைப்படங்களை எடுப்பதில் பிசியாக உள்ளது.இப்பொழுது கூட நடிகை சாவித்திரி அம்மாள் அவர்களின் வாழ்கை வரலாறு படமாக எடுக்க பட்டது இதில் கீர்த்திசுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடித்தார்,துல்கர் காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகா நடித்து இருந்தார் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .இப்பொழுது  எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமா உலகம் என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறை தழுவி படம் எடுத்து வருகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் கொண்டு படமெடுக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

இப்பொழுது தலைவர்கள் வரிசையில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது.இலங்கையில் தமிழர்கள்
கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதற்கு எதிராக விடுதலை புலிகள் அமைப்பை நிறுவி, ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தவர் பிரபாகரன். 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது, பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டாலும், அதற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவு அளிக்க கூடிய இளைஞர்கள் பலர் உள்ளனர்.

சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார். ஸ்டூடியோஸ் 18 இந்த படத்தை தயாரிக்க உள்ளது. உனக்குள் நான் மற்றும் லைட் மேன் படங்களை இயக்கியவர் வெங்கடேஷ் குமார். இலங்கை உள்நாட்டு போரை மையமாக கொண்டு இவர் இயக்கிய நீலம் என்ற திரைப்படம், மத்திய தணிக்கை வாரியத்தால் தடை செய்யப்பட்டது. இந்த படத்தால், இந்தியா-இலங்கை உறவு பாதித்துவிடும் என்று அதற்கு காரணம் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.நடிகர் பாபிசிம்ஹா ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்


 

 


 

 

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story