பெண்கள் போட்ட திட்டம் எல்லாம் வீணாப்போச்சே! தர்ஷனின் நிலைமை என்னவாகும்! எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ...
பெண்கள் போட்ட பிளான் எல்லாம் வீணாப்போச்சே! தர்ஷனின் நிலைமை என்னவாகும்! எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ...
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல், தொடர்ந்து விறுவிறுப்புடன் இரண்டாம் சீசனில் செல்லும் நிலையில், தற்போதைய கதையின் முக்கிய மையமாக தர்ஷன்-அன்புக்கரசி திருமணம் அமைந்துள்ளது.
திருச்செல்வம் இயக்கத்தில் உருவான இந்த தொடர், முதல் சீசனில் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்ததைத் தொடர்ந்து, இரண்டாம் சீசனிலும் அதே தாக்கத்தை வழங்கி வருகிறது.
தற்போது, குணசேகரன் தனது சூழ்ச்சி மூலம் இந்த திருமணத்தை நிகழ்த்த முயல்கிறார். ஆனால், அவரது திட்டங்களை தடுக்க, பெண்கள் அமைதியாகவே அவருடன் நின்று பிளானை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீனா செய்த செயலால் அதிர்ச்சியில் விஜயா! அம்மாவுக்காக முதல்முறையாக பேசிய முத்து! சிறகடிக்க ஆசை புது ப்ரோமொ காட்சி...
புரொமோவிலே வரும் முக்கியமான காட்சியில், தர்ஷன் பார்கவியை சந்திக்க அன்புக்கரசியை ஏமாற்றிச் செல்லும் காட்சி இடம்பெறுகிறது. இதை உணர்ந்த அன்புக்கரசி, அறிவுக்கரசியிடம் உண்மையை தெரிவித்து, உடனடியாக வருமாறு அழைக்கிறார்.
இதனிடையே, கதிரும் அறிவுக்கரசியும் கோபம் அடைகிறார்கள். ஜனனி மற்றும் ரேணுகா, தர்ஷனை காப்பாற்றும் நோக்கத்தில் விரைந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் அமைத்த திட்டம் குணசேகரனுக்கு தெரியவருமா? தர்ஷனின் நிலைமை என்னவாகும்? என பல கேள்விகள் ரசிகர்களிடையே உருவாகி வருகின்றன.
இதையும் படிங்க: பிரபல டாப் சீரியல்களின் நாயகிகள் சேர்ந்து செய்த வேலையை பாருங்க! வைரலாகும் வீடியோ...