இசைஞானி-75 பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு.!
esai gani - elayaraja75 birthday celepration

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழாவை, மாபெரும் இசை நிகழ்ச்சியாக நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இசைஞானி இளையராஜா தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி ஆதாரத்தை உயர்த்துவதற்கு நான் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வரும் வருவாயை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வழங்குவேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவருடைய இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அன்றே நடத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நமது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசைஞானி இளையராஜா அவர்களின் 75வது பிறந்த நாளை வருகிற 2019-ம் ஆண்டு, பிப்ரவரி-2 மற்றும் 3ம் தேதிகளில் இசையராஜா-75 என்ற பெயரில் மாபெரும் இசை மற்றும் கலைநிகழ்ச்சியாக இந்திய அளவில் வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
எனவே அன்றைய தினத்தில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள். ஆகையால் நமது சங்க உறுப்பினர்கள் வருகிற 2019-பிப்ரவரி-2 மற்றும் 3ம் தேதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடவேண்டாம் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.