தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவருடன் காதல் வயப்பட்டது எப்படி? - மனம்திறந்த ஹாரிபாட்டர் பட நடிகை.!

அவருடன் காதல் வயப்பட்டது எப்படி? - மனம்திறந்த ஹாரிபாட்டர் பட நடிகை.!

Emma Watson Says In Love With Tom Felton During Process Of Harry Potter Movie  Advertisement

உலகம் முழுவதும் பார்வையாளர்களை ஈர்த்த பிரம்மாண்ட திரைப்படம் ஹேரி பாட்டர். இந்த படத்தில் நடித்திருந்த நடிகை எம்மா வாட்சன். இவர் ஹேரி பாட்டர் திரைப்படம் உருவாகும் போது, சக நடிகரான டாம் பெல்ட்டுடன் எடப்பாடி காதலில் விழுந்தேன் என்ற அழகிய தருணங்களை தெரிவித்துள்ளார். 

Emma Watson

ஹேரி பாட்டர் திரைப்படம் பல சீரிஸாக வெளியான நிலையில், முதல் பாகம் வெளியிட்டு 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் HBO தொலைக்காட்சியில் ஹேரி பாட்டர் ரிட்டர்ன் டூ ஹாஃவார்ட்ஸ் என்ற நிகழ்ச்சிக்காக படத்தில் நடித்திருந்தவர்கள் அனைவரும் இணைகின்றனர். இந்த நிகழ்ச்சி ஜனவரி 1 ஆம் தேதி 2022 அன்று HBO-வில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து எம்மா வாட்சன் கூறுகையில், "நான் திரைப்படத்தில் நடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். அங்குள்ள அறையில் சென்றதும், அங்கு டாம் தனது ஸ்கேட்போரில் தொப்பியுடன் பெண்மணி இருப்பது போன்ற தோற்றத்தை வரைந்தார். அதனை எப்படி கூறுவது என்று கூட எனக்கு தெரியவில்லை. நான் அவரை காதலிக்க தொடங்கினேன். 

நான் அவரின் மீது ஈர்ப்பு வைத்திருப்பதை கண்களால் புரிந்துகொண்ட டாம் அவரின் பணிகளை தொடர்ந்து செய்தார். நான் மேக்கப் நாற்காலியில் இருந்தேன். என்னை கண்டுகொள்ளாமல் அவரது பணியில் மும்மரமாக இருந்தார்.

அவரின் மீது எனக்கு காதல் நாட்டம் இருந்தாலும், நாங்கள் டேட்டிங் கூட சென்றது இல்லை. மேலும், நீ என் இளைய சகோதரி போன்றவள் என்று டாம் கூறினார்" என்று தெரிவித்தார்.

இந்த ஹேரி பாட்டர் ரிட்டன் டூ ஹாஃவார்ட்ஸ் நிகழ்ச்சி ஜன. 1 2022 அன்று ஒளிபரப்பானதும் இதனைப்போல பல ருசிகர விஷயங்கள் வெளிப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Emma Watson #Tom Felton #Harry Potter #world #cinema #HBO #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story