ஆர்யா திருமணம்; எங்கவீட்டு மாப்பிளை அபர்ணதியின் ரியாக்சன் என்ன தெரியுமா?
Eanga veetu maapilai abarnathi reaction about arya marriage

நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வந்ததை அடுத்து அந்த செய்தி உண்மைதான் என நேற்று உறுதி செய்தார் நடிகர் ஆர்யா. அதன்படி, இருவரும் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்னனர்.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்ப்பதாக கூறி எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியை நடத்தியது கலர்ஸ் தொலைக்காட்சி. இதில் கலந்துகொண்ட 16 பெண்களில் கடைசியாக வந்த மூன்று பெண்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என பார்வையாளர்கள் நம்பினார். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி எந்த பெண்ணையும் ஆர்யா திருமணம் செய்துகொள்ளவில்லை.
அந்த 16 பெண்களில் ஒருவர் அபர்ணாதி. எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அபர்ணாதி மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளரும் ஆவார். ஆனால், போட்டியின் இறுதி கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் அபர்ணாதி. தற்போது GV பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் ஆர்யாவின் திருமா செய்தி கேள்விப்பட்ட அபர்ணாதி தனது டிவிட்டர் பக்கத்தில் “ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் வாழ்த்துக்கள்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.