ஷூட்டிங்கிற்கு செல்வதற்காக வீட்டின் கேட்டை உடைத்து தள்ளிய பிரபல நடிகர்! அவரே வெளியிட்ட பதிவு!
Dwaine johnson broke gate for go to shooting

உலகளவில் புகழ் பெற்று, ரசிகர்களால் தி ராக் என அன்போடு அழைக்கப்படுபவர் பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன். இவர் பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ், ஸ்கைஸ்க்ராப்பர், ஜூமாஞ்சி, ஸ்கார்ப்பியன் கிங் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் டுவைன் ஜான்சன் தற்போது பிளாக் ஆடம் என்ற படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டநிலையில், புயலால் மின்தடை ஏற்பட்டு வாயில் கேட் திறப்பதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை. உடனே அவர் கேட்டை கையால் உடைத்து தள்ளியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த டுவைன் ஜான்சன், நான் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது வீட்டின் வாயில் கேட் திறக்கவில்லை. மேலும் அதனை சரிசெய்யும் தொழில்நுட்ப நிபுணர்கள் வர 45 நிமிடங்கள் ஆகும் என்றனர். ஆனால் நான் வந்தால்தான் வேலையை தொடங்கமுடியும் என நூற்றுக்கணக்கானோர் படப்பிடிப்பில் காத்திருந்தனர். அதனால் கேட்டை உடைத்து சுவரில் இருந்து பெயர்த்து வீசிவிட்டு படபிடிப்புக்கு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.