திரௌபதி 2 படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி.. மோகன் ஜி போட்ட பதிவு.. நடந்தது என்ன?.!
திரௌபதி 2 படத்தின் எம்கோனே பாடல் பாடியதற்காக பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டுள்ளார்.
எம்கோனே பாடல் பாடியதற்காக பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்
திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கி வரும் நிலையில், இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துவரும் இப்படத்தில் ரக்ஷனா திரௌபதியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் எம்கோனே பாடல் வெளியான நிலையில், பாடலை பாடகி சின்மயி பாடியிருந்தார்.
மன்னிப்பு கேட்ட சின்மயி:
இன்று வெளியான இப்பாடல் குறித்து விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, சின்மயி மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எம்போனே என்ற பாடலை பாடியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக எனக்கு ஜிப்ரானே தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து பாடல் பாட அழைத்தபோது வழக்கமான பாடலாக இருக்கும் என நினைத்து சென்றேன்.
எனக்கும், அந்த கொள்கைக்கும் கருத்து முரண்பாடு:
இந்த பாடல் பதிவின்போது ஜிப்ரானும் அங்கு இல்லை. இப்போது எனக்கு அனைத்தும் புரிந்து விட்டது. இது தொடர்பான விஷயம் முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் நான் பாடியிருக்க மாட்டேன். எனக்கும், அந்தக் கொள்கைக்கும் நிறைய கருத்து முரண்பாடு உள்ளது. இது உண்மை" என தெரிவித்திருக்கிறார். திரௌபதி படத்தில் பாடல் பாடியதற்காக சின்மயி தனது கருத்தை முன்வைத்து மன்னிப்பு கேட்டு இருந்த நிலையில், மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மோகன் ஜி பதிவு:
அந்த பதிவில், "என்னுடன் திரௌபதி 2 படத்தில் வேலை பார்த்து வரும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் யாரையும் குறிவைத்து தாக்கி பேச வேண்டாம். எனது படம் பேசுவது எனது சொந்த சிந்தனையை தான். என்னுடன் நேரடியாக, மறைமுகமாக இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து விமர்சனங்களை முன்வைப்பது கோழைத்தனமான செயல்" என தெரிவித்துள்ளார்.