×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித், சிம்புவின் இந்த படங்களை பார்க்க வேண்டாம்..! இயக்குனர் கெளதம் மேனன் வேண்டுகோள்.!

Dont watch ajith and simbu movies director gautham menon

Advertisement

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தையும், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களையும் தற்போது உள்ள சூழலில் யாரும் பார்க்கவேண்டாம் என இந்த படங்களின் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் வீடியோ ஒன்றில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காரணமாக மே 3 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே இருக்கும்படி அரசு அருவுறுத்திவருகிறது. பிரபலங்களும் கொரோனா சம்மந்தமாக பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வுக்காக இராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இயக்குனர் கௌதம் மேனன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு தனது காதலியை பைக்கில் ஏற்றிக்கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்வார்.

அதேபோல, என்னை அறிந்தால் படத்தில் அஜித் தனது மகளை அழைத்துக்கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கு செல்வார். இந்த இரண்டு காட்சிகளும் தற்போதைய சூழலுக்கு தவறான உதாரணங்கள் என கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரும் 144 தடை உத்தரவை முழுமையாக கடைபிடிக்கவேண்டும் எனவும் கௌதம் மேனன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #simbu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story