×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹீரோவான கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் மகனை பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!

disco shanthi sons photo viral

Advertisement

1980களில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவர்  உதய கீதம், காதல் பரிசு, உரிமை கீதம், புதிய வானம், தர்மத்தின் தலைவன், வெற்றி விழா என எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் இறுதியாக நடித்த திரைப்படம் துறைமுகம்.

மேலும் நடிகையாக களமிறங்கிய டிஸ்கோ சாந்தி ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றார். இதனை தொடர்ந்து மேலும் அவர் பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டார்.

இதனைத்தொடர்ந்து டிஸ்கோ சாந்தி பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 1 மகள் மற்றும்  இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது டிஸ்கோ சாந்தியின் மூத்த மகன் மேகன்ஸ் லக்ஷயா ப்ரொடக்ஷ்ன் தயாரிப்பில் உருவாகும்  படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#disco shanthi #son
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story