×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனது மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது மறக்க முடியாத ஆசிர்வாதம்.! சந்தோஷத்தில் இயக்குநர் ஷங்கர்.!

இந்தியளவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யாவுக்கும்

Advertisement

இந்தியளவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்தினர். மணமக்களை வாழ்த்திய முதல்வர் மரக்கன்றுகளை பரிசளித்து வாழ்த்தினார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், முதல்வருக்கும், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”மகளின் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தியது மறக்க முடியாத ஆசிர்வாதம். அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி” என்று உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#director shankar #MK Stalin
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story