ஹாலிவுட் நடிகர் போல் மாறிய இயக்குனர் செல்வராகவன்..! வீடியோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்.!
Director selvaraghavan new look goes viral
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த இவர் இரண்டாம் உலகம் திரைப்படத்தின் மாபெரும் தோல்விக்குப்பிறகு சரியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
ஆனாலும் இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். தற்போது படப்பிடிப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வாழ்க்கை தத்துவங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது தனது முகத்தை என் மனைவி என்ன செய்து வைத்துள்ளார் பாருங்கள் எனப்பதிவிட்டு ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பைரட்ஸ் ஆப் கரிபியன் படத்தில் ஜாக் வேடத்தில் நடித்த ஜானி டேப்பின் கெட்டப்பில் அவர் மாறி இருக்கிறார்.