×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மியில் மிளகு சீரகம் அரைத்து ரசம் வைக்கும் பிரபல தமிழ் இயக்குனர்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Director Seenu ramasamy cooking video

Advertisement

தேசிய விருதுபெற்ற பிரபல தமிழ் இயக்குனர் சீனு ராமசாமி ஊரடங்கு சமயத்தில் தனது வீட்டில் ரசம் வைத்த வீடியோ சமூக வைத்தலங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாகவும், ஊரடங்கு சமயத்தில் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பது குறித்தும் பல்வேறு பிரபலங்கள் வீடீயோ வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வகையில், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள்தனது கையால் அம்மியில் மிளகு சீரகம் உள்ளிட்டவற்றை அரைத்து அவரே ரசம் வைக்கும் காட்சியின் வீடியோ அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Seenu ramasamy #corono
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story