×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மைனஸ் 12 டிகிரி குளிர்... லியோ படப்பிடிப்பை முடித்த முக்கிய பிரபலம்.! ஸ்வீட்டான அனுபவத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி!!

மைனஸ் 12 டிகிரி குளிர்... லியோ படப்பிடிப்பை முடித்த முக்கிய பிரபலம்.! ஸ்வீட்டான அனுபவத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி!!

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது பகுதியை நடித்து முடித்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் அதுகுறித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக் குழு கடுமையாக உழைத்து எனது பகுதியை நிறைவு செய்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். அசிஸ்டன்ட் டைரக்டர்களின் ஓயாத உழைப்பும் என் மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும், கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப் போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான். அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றிய அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடையும். என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leo #shooting #mysskin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story