EmKoney Draupathi 2 Song: வெளியானது திரௌபதி 2 படத்தின் 'எம்கோனே' பாடல்.. லிங்க் உள்ளே..!
திரௌபதி 2 படத்தில் இடம்பெற்ற எம்கோனே பாடல் வெளியாகியுள்ளது.
EmKoney Lyrical Song Tamil Draupathi 2 Movie: திரௌபதி 2 படத்தின் எம்கோனே பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் இப்படம் பல மொழிகளில் வெளியாகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி என பல சர்ச்சை படங்களை எடுத்து பிரபலமான இயக்குநர் மோகன். இவர் தனது படங்கள் வாயிலாக பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படைப்புகளுக்கு திரைப்பட மோதலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தமிழ் சினிமா சொல்லமுடியாத துயரங்களை எதிர்கொண்டு வருகிறது.
அதே நாயகன்:
இதனிடையே, திரௌபதி படத்தின் மூலம் பல சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
எம்கோனே பாடல்:
மோகனின் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களை போல அல்லாமல், இப்படம் வரலாறுகளின் முந்தைய காலங்களில் நடந்த கதையை கொண்டு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், திரௌபதி 2 படத்தில் இடம்பெற்றுள்ள எம்கோனே பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடலை சின்மயி பாடியிருந்ததாக செய்தி வெளியான நிலையில், அவரை பலரும் வசைபாடி தீர்த்தனர். இதனால் மோகன் தனது ட்விட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், படத்தின் பாடல் வெளியாகி இருக்கிறது.
எம்கோனே படத்தின் பாடல்: