×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: இயக்குனர் ஜனநாதன் உடல்நல குறைவால் காலமானார்... சோகத்தில் ரசிகர்கள்..

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஜனநாதன் உடல்நல குறைவால் காலமானார்.

Advertisement

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஜனநாதன் உடல்நல குறைவால் காலமானார்.

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கியவர் ஜனநாதன் (61). விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள, லாபம் படத்தை இயக்கியவர். லாபம் படத்திற்கான எடிட்டிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இவர் சமீபத்தில் மதியம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக சென்றிருந்தார்.

சாப்பிட சென்றவர் நீண்ட நேரமாகியும் பணிக்கு திரும்பாததால் அவரது உதவியாளர் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தார். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததுடன், தரையில், ஜனநாதன் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இதனை அடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி தனது 61 வயதில் உயிரிழந்தார்.

இயக்குனர் ஜனநாதன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #Director Jananadhan #RIP Jananadhan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story