×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 லட்சத்துக்கு ஆசைப்பட்டத்ததால் தான் இப்படி ஆச்சா? நடிகை சௌந்தர்யா மரணம்... 22 வருஷத்திற்கு பின் இயக்குநர் சொன்ன ஷாக்கிங் தகவல்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

நடிகை சௌந்தர்யாவின் மறைவு குறித்து இயக்குநர் கீதா கிருஷ்ணா கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

Advertisement

தென்னிந்திய திரையுலகின் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவரான சௌந்தர்யா குறித்து இயக்குநர் கீதா கிருஷ்ணா அண்மையில் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரே நேரத்தில் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

ரசிகர்கள் மனதில் நீங்காத நடிகை

90-களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தார். கவர்ச்சியை முன்னிறுத்தாமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களையும் இயல்பான நடிப்பையும் தேர்வு செய்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்தார்.

இதையும் படிங்க: நடிகை சிம்ரனின் தங்கை மோனலின் மர்ம மரணம்! பல ஆண்டு கேள்விக்கு கிடைத்த பதில்... இவர் தான் காரணமா? சிம்ரன் போட்டு உடைத்த அந்த அதிர்ச்சி உண்மை.!!!

ஹெலிகாப்டர் விபத்தும் கீதா கிருஷ்ணாவின் கருத்தும்

2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யாவும், அவரது சகோதரரும் உயிரிழந்தனர். அவரது மறைவுக்கு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இயக்குநர் கீதா கிருஷ்ணா அளித்த பேட்டியில், “பாஜக தலைவர் வித்யாசாகர் ராவ் வழங்கிய இரண்டு லட்ச ரூபாய் கூலிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றதே அவரது தவறான முடிவாகிவிட்டது. அந்தப் பயணத்தைத் தவிர்த்திருந்தால் இன்று அவர் நம்முடன் இருந்திருப்பார்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் தீவிர விவாதம்

இந்த கருத்துகள் வெளியாகியதைத் தொடர்ந்து, கீதா கிருஷ்ணாவின் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யாவின் உயிரிழப்பை பணத்துடன் தொடர்புபடுத்திப் பேசுவது பொருத்தமற்றது என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், நடிகை மீது இருந்த பாசமும் அவரது அகால மறைவால் ஏற்பட்ட வேதனையும்தான் இயக்குநரின் கருத்தில் பிரதிபலித்திருக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நடிப்பெல்லாம் ஒன்னும் இல்ல... உடம்பை காட்டுறதுக்கு மட்டும்தான் அவங்க இருக்காங்க..!!! வாயால் வறுத்தெடுத்த விஜே பார்வதியின் அம்மா.... வைரலாகும் வீடியோ.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#soundarya #Geetha Krishna #helicopter crash #BJP Campaign #சௌந்தர்யா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story