×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"மீண்டும் சூர்யாவுடன் இணைவதில் எந்த தயக்கமும் இல்லை! இயக்குனர் பாலா !

மீண்டும் சூர்யாவுடன் இணைவதில் எந்த தயக்கமும் இல்லை! இயக்குனர் பாலா !

Advertisement

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் "வணங்கான்". மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு கன்னியாகுமரியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் திடீரென சூர்யா இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பாலா "சூர்யா என் தம்பி போன்றவர். அவருடன் இணைந்து புதிய படத்தை எடுக்க விரும்பினேன். ஆனால் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக இந்தப் படம் சூர்யாவுக்கு சரி வராது என்பதால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். 

என் மீதும், என் கதையின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் சூர்யாவுக்கு என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட ஏற்படக்கூடாது என்று உறுதியாகவுள்ளேன். என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளார் சூர்யா என்று பாலா கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் மிஸ்கின் இசையமைத்துள்ள டெவில் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாலா, "சூர்யா எனக்கு தம்பி போல. அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு தயக்கமில்லை" என்று கூறியுள்ளார். தற்போது வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kollywood #cinema #News #surya #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story