×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் சீசன் 7ல் நுழையும் பிரபல கவர்ச்சி நடிகை.. அடடே இவரா.?

பிக்பாஸ் சீசன் 7ல் நுழையும் பிரபல கவர்ச்சி நடிகை.. அடடே இவரா.?

Advertisement

பிக்பாஸ் சீசன் 7ல் பிரபல நடிகை தர்ஷா குப்தா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் முக்கியமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 7 சீசன் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த சீசனில் பிக் பாஸ் 2 வீடுகள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சீசனில் தினேஷ் கோபாலசாமி, பப்லு பிரித்திவிராஜ், ரக்சன், அப்பாஸ், அம்மு அபிராமி, சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சோனியா அகர்வால், பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, பிஜே பார்வதி, நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை தர்ஷா குப்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Biggboss 7 #kamalhasan #Dharsha Gupta #biggboss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story