×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: வி.ஐ.பி தனுஷ் "தம்" அடித்த காட்சிக்கு எதிரான வழக்கு.. தனுஷுக்கு சாதகமான நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு.!

#Breaking: வி.ஐ.பி தனுஷ் தம் அடித்த காட்சிக்கு எதிரான வழக்கு.. தனுஷுக்கு சாதகமான நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு.!

Advertisement

புகைபிடிக்கும் காட்சியில் நடித்த தனுஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில், தனுஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ல் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடித்த காட்சிகளில் நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கண்டனங்கள் எழுந்தது. இந்த விஷயம் தொடர்பாக பொது சுகாதாரத்துறை வழக்குப்பதிவும் செய்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தனுஷை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. 

மேலும், படத்தயாரிப்பாளரான ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் அராஜக உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். 

இம்மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. பின்னாட்களில் வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்படுகிறது.

புகைப்பழக்கம் உடலுக்கு தீங்கானது, உயிரை கொல்லும், புற்றுநோயை ஏற்படுத்தும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dhanush #court #velai illa pattathari #cinema
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story