தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
ரசிகர்களை கவர்ந்த ராஞ்சனா
பாலிவுட்டில் தனுஷ் அறிமுகமான முக்கிய படமான 'ராஞ்சனா' கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழ் மொழியில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியான இந்த திரைப்படம், 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது, இந்தப் படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய க்ளைமாக்ஸ் காட்சிகளுடன் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளிவரவுள்ளது.
கதை, இசை, நடிப்பின் முத்தான சங்கமம்
ஆனந்த் எல். ராய் இயக்கிய இந்த திரைப்படத்தில், தனுஷுடன் சோனம் கபூர் மற்றும் அபய் தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் இந்தப் படத்திற்கு பிரமாண்டமாக இசையமைக்கபட்டுள்ளது. ஒருதலை காதலின் உணர்வுகளை சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தக் கதையை, இந்தியாவின் பல பிராந்திய ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர்.
இதையும் படிங்க: திருமணத்துக்குப் பிறகும் ஸ்டைலிஷ் லுக்.. வெள்ளை நிற ஆடையில் கீர்த்தி சுரேஷின் மின்னும் புகைப்படம் வைரல்!?
4K மற்றும் அட்மாஸ் சவுண்ட் வடிவத்தில் புதிய அனுபவம்
தற்போது, இந்தப் படம் மிக நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், அட்மாஸ் சவுண்ட் வடிவத்தில் மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியாவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் காதல் கதை பலரது மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை மாற்றி, புதிய பரிமாணத்தை வழங்கும் வகையில் புதிய க்ளைமாக்ஸ் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட முடிவைச்சுற்றிய எதிர்பார்ப்பு
அப்ஸ்விங் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகி வளியாகவிருக்கும் இப்படம் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும் இப்படத்தின் புதிய முடிவு, பழைய முடிவின் தாக்கத்தைக் குறைக்குமா அல்லது இன்னொரு உணர்வுபூர்வமான பார்வையை உருவாக்குமா என்பது அறியப்படும் வரைக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பிறந்தநாளுக்கு முன் ரசிகர்களுக்கு பரிசு
தனுஷின் 43வது பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதியை முன்னிட்டு, இப்படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதியில் திரைக்கு வர உள்ள ‘அம்பிகாபதி’யின் புதிய வடிவம் ரசிகர்களிடம் எவ்வாறு பாராட்டு பெறும் என்பதையும், குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிகள் புதிய சிந்தனையை ஏற்படுத்துமா என்பது குறித்தும் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்துக்குப் பிறகும் ஸ்டைலிஷ் லுக்.. வெள்ளை நிற ஆடையில் கீர்த்தி சுரேஷின் மின்னும் புகைப்படம் வைரல்!?