தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

" நான் ரெடி தான் வரவா பாடலுக்கு மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை!"

நான் ரெடி தான் வரவா பாடலுக்கு மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை!

Devadharshini dance with her daughter for vijay movie Advertisement

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் தேவதர்ஷினி. கல்லூரியில் படிக்கும்போதே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய இவருக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "கனவுகள் இலவசம்" என்ற தொடரில் முதல் வாய்ப்பு கிடைத்தது.

actress

இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் மற்றும் ரமணி Vs ரமணி, சிதம்பர ரகசியம், விடாது கருப்பு, கோலங்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, கண்ணாடிக் கதவுகள், லட்சுமி, அஞ்சலி, இதயம், அத்திப்பூக்கள் உள்ளிட்ட மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து வெள்ளித்திரையிலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இவர், காக்க காக்க, எனக்கு 20 உனக்கு 18, காதல் கிறுக்கன், பார்த்திபன் கனவு, அழகிய தீயே, பொன்னியின் செல்வன், கண்டநாள் முதல், கிரீடம், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக நடிகர் சேத்தனை மணந்து கொண்ட இவருக்கு நியதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் லியோ படத்தில் வரும் "நா ரெடி தான் வரவா" பாடலுக்கு தனது மகளுடன் சேர்ந்து தேவதர்ஷினி குத்தாட்டம் போட்டுள்ளார். இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தேவதர்ஷினி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress #Kollywood #Viral #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story