தனுஷுடன் டேட்டிங் போகணும்..! தளபதி விஜய்யை கல்யாணம் பண்ணிக்கணும்.! பிரபல நடிகையின் ஆசை..!
Date with dhanush marriage with vijay actress natasha singh
நடிகர் தனுஷுடன் டேட்டிங் செல்லவேண்டும், தளபதி விஜய்யை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என நகைச்சுவையாக பேட்டி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் புதுமுக நடிகை நடாஷா சிங்.
இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாத வெளியான படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர்தான் புதுமுக நடிகை நடாஷா சிங். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நட்டாஷாவிடம் சில சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டது.
அதில், நீங்கள் யாரை கில் பண்ண நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நடிகர் ஜீவாவை தான் என்று கூறியுள்ளார். மேலும், யாருடன் டேட்டிங் செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் தனுஷுடன் டேட்டிங் செல்ல ஆசை படுவதாக கூறியுள்ளார்.
மேலும், எந்த நடிகரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் தளபதி விஜய் தான் என்று கூறியுள்ளார் நடிகை நடாஷா.