×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமெரிக்காவில் வசூலில் அடித்து நொறுக்கிய தர்பார் படம்! வசூல் மட்டும் இத்தனை கோடியா!

Darpor

Advertisement

பேட்ட படத்தை தொடர்ந்து  ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.   மேலும் அப்படத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

மேலும் லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

அதேபோல் எப்போதும் அமெரிக்காவில் ரஜினியின் படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். தற்போது தர்பார் படத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இப்படம் அமெரிக்காவில் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை படைத்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் 10 கோடியை தாண்டும். மேலும் இதுவரை வெளியான ரஜினி படத்தில் இந்த படம் ஏழாவது படமாக 1 மில்லியன் டாலரை கடந்த படமாக இப்படம் கருதப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Darpor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story