×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

துயரமான செய்தி! பிரபல முன்னணி டான்ஸ் மாஸ்டர் மறைவு! கதறும் திரையுலகம்!!

துயரமான செய்தி! பிரபல முன்னணி டான்ஸ் மாஸ்டர் மறைவு! கதறும் திரையுலகம்!!

Advertisement

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான படங்களில் பணியாற்றி முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். இவர் தமிழில் திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மேலும் வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு,தானா சேர்ந்த கூட்டம், பரதேசி, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்துள்ளது.

மேலும் அவரது மூத்த மகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நடன இயக்குனர் சிவசங்கர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sivashankar #dead #dance master
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story