×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. இதைத்தானே எதிர்பார்த்தோம்.! கவினின் டாடா படம் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா.! வெளிவந்த அறிவிப்பு!!

அட.. இதைத்தானே எதிர்பார்த்தோம்.! கவினின் டாடா ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா.! வெளிவந்த அறிவிப்பு!!

Advertisement

அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் டாடா. இப்படத்தில் ஹீரோவாக கவின் மற்றும் கதாநாயகியாக அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்தனர். மேலும் அவர்களுடன் பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ், பிரதீப் ஆண்டனி ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

டாடா படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரித்திருந்தார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. 

இந்த நிலையில் தற்போது டாடா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாடா திரைப்படம் பிரபல அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dada #OTT #kavin
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story