×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.! சிம்புவால் செம ஹேப்பியான டி. ராஜேந்தர்! கூறியதை பார்த்தீங்களா!!

அதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.! சிம்புவால் செம ஹேப்பியான டி. ராஜேந்தர்! கூறியதை பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாக அவதாரமெடுத்து அனைவரின் மனதையும் கவர்ந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று பிரபலமானவர் நடிகர் சிம்பு. இடையில் சிம்பு உடல் எடை அதிகரித்த நிலையில் அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் சில தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து அவர் கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்தார்.

 பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று கம்பேக் கொடுத்தார். அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியதாவது, அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணலை கண்டேன். அவர் சிம்புவின் உழைப்பை குறித்து பேசியிருந்தார். மிகவும் பெருமையாக இருந்தது. வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு 20 வயது இளைஞனாக நடிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் கௌதமேனன் அவர் நடித்தால்தான் சரியாக இருக்கும் என கூறினார்.

பின் சிம்பு மிகவும் கஷ்டப்பட்டு எடையை குறைத்து, போட்டோஷூட் எடுத்து அதனை ஜெயமோகனிடம் காட்டியுள்ளார். அதனை பார்த்த ஜெயமோகன் சிம்பு 18 வயது இளைஞனாக மாறிவிட்டதாக பாராட்டினார். மிகப்பெரிய எழுத்தாளரான ஜெயமோகன் சிம்புவை பாராட்டியது நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #D rajendar #Vendu thaninthadu kaadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story