×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. சூப்பர் ஜோடி! வருங்கால மனைவியுடன் செம கியூட்டாக புகழ்! வைரலாகும் புகைப்படம்!!

வாவ்.. சூப்பர் ஜோடி! வருங்கால மனைவியுடன் செம கியூட்டாக புகழ்! வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் கோமாளியாக  பங்கேற்று தனது கலாட்ட  நிறைந்த  காமெடியான பேச்சால், உடல் பாவனையால் ரசிகர்களை கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

மேலும் அதனை தொடர்ந்து புகழ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும் புகழின் உச்சிக்கே சென்ற அவருக்கு  வெள்ளிதிரையில் ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது. அவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். புகழ் பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  அவரே புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புகழ் தனது வருங்கால மனைவியுடன் ஜோடியாக இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் சூப்பர் ஜோடி என கூறி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படம் பெருமளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cook with comali #pugazh #Pency
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story