×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. இவங்களெல்லாம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகிறாங்களா! வெளிவந்த போட்டியாளர்களின் பட்டியல்!!

என்னது.. இவங்களெல்லாம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகிறாங்களா! வெளிவந்த போட்டியாளர்களின் பட்டியல்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதையே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வகையிலும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் முதல் சீசனில் நடிகை வனிதா வெற்றியாளர் ஆனார். மேலும் இரண்டாவது சீசனில் கனி அசத்தலாக சமைத்து வெற்றியைத் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளதாக ப்ரமோ வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

அதன்படி குக் வித் கோமாளி சீசன் 3ல் நடிகரும், இயக்குனருமான மனோபாலா, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், பிரபல பாடகர்களான கிரேஸ் கருணாஸ்,  அந்தோணிதாசன் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cook with comali #Contestants
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story