வடிவேலுவை இதனால் தான் அடிக்க சென்றேன்.. அவருடன் நடித்த காமெடி நடிகரின் சர்ச்சையான பேட்டி.!
வடிவேலுவை இதனால் தான் அடிக்க சென்றேன்.. அவருடன் நடித்த காமெடி நடிகரின் சர்ச்சையான பேட்டி.!

கோலிவுட் திரையுலகில் நகைச்சுவை என்றாலே நாகேஷ், கவுண்டமணி, செந்தில் இவர்களின் வரிசையில் வடிவேலுவும் ஒருவராவர். அன்றிலிருந்து இன்று வரை இவரது நகைச்சுவைக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
வடிவேலு தற்போது நடிக்கவில்லை என்றாலும் அவரை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் இவரின் நகைச்சுவை உயிர்ப்பாக உள்ளது. பல திரைப்படங்கள் வெற்றி பெற இவரது நகைச்சுவையும் ஒரு காரணமாகும்.
அதே நிலையில், வடிவேலுவை குறித்து அவருடன் நடித்த பல நடிகர்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அவ்வாறு வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த சாரப்பாம்பு சுப்பு ராஜ் ஒரு பேட்டியில் வடிவேலுவை அடிக்க சென்றதாக கூறியிருக்கிறார்.
அப்பேட்டியில் அவர் கூறினார், " விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் விஜயகாந்துடன் நான் நடித்து இருக்கும் போது அவரது கேரவனில் படுத்து உறங்கிவிடுவேன். அவர் என்னை எழுப்பாமல் கீழே படுத்துக் கொள்வார். அவருடன் இருக்கும் போது சாப்பாட்டுக்கு குறையே இருக்காது. அப்படிபட்ட மனிதரை அரசியலின் காரணமாக வடிவேலு தவறாக பேசியதால் அடிக்க சென்றேன் என்று கூறிய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.