×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க அனுமதி! தமிழக அரசு விடுத்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?

conditions for serial shooting in tamilnadu

Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்காவது கட்டமாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கவேண்டுமென  தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அவை 

சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது. மேலும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை
இல்லை. பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது. படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். படப்பிடிப்பின் இடைவெளியின்போது நடிகர், நடிகைகளும் தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும். படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா,கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 பேர் கொண்டு படப்பிடிப்பு  நடத்தலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சிஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#serial #shooting #tamilnadu government
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story