×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சோகங்களை கடந்து வாழ்வில் முன்னேறிய நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை கதை தெரியுமா?

Comedy actor vadivelu's life history and facts

Advertisement

மதுரையை சேர்ந்த நடராசன், சரோஜினி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வடிவேலு தனது சிறுவயதில் இருந்தே பள்ளிக்கூடமே செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை நடிகர் வேடமிட்டு நடித்து அசத்துவாராம்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வடிவேலுவின் அப்பா மரணம் அடைய, வடிவேலுவின் குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டது.

அதன் பின் மதுரையில் புகைப்படங்களுக்கு ஃபிரேம் மாட்டும் ஒரு சிறிய கடையில் வடிவேலு வேலை செய்து வந்தாராம்.

வடிவேலுவின் ஊருக்கு ஒருமுறை ராஜ்கிரண் சென்றிருந்த போது, நடிகர் ராஜ்கிரணுடன் வடிவேலுக்கு அறிமுகம் கிடைத்ததாம்.

அந்த உறவின் பலனாக சென்னையில் ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் வடிவேலு பணிபுரிந்து வந்தாராம்.

பின் வடிவேலுவின் நடிப்பு திறனை கண்ட ராஜ்கிரண், என் ராசாவின் மனதிலே எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.

முதல் படத்திலேயே போடா, போடா புண்ணாக்கு என்ற பாடலையும் பாடினாராம் வடிவேலு. அதன் பின்பு செந்தில், கவுண்டமணியுடன் சேர்ந்து சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.

வடிவேலு தனது நகைச்சுவை மிக்க திறமையை நடித்து நிலைநாட்டிய படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் ஆகும்.

இதன் பிறகே தனி முதன்மை நகைச்சுவை நடிகராக வடிவேலு பிரபலமாக ஆரம்பித்தார்.

1990-களின் இறுதிகளில் இருந்து, 2000 துவக்கத்தின் முதலாக அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக வடிவேலு உருமாறினார்.

தனது ஆரம்பக் கால வாழ்க்கையின் ஏழ்மை நிலையை மறக்காத வடிவேலு, தனது மகனுக்கு சிவகங்கையில் கூரை வீட்டில் வசித்து வந்த ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளாராம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivelu #Vadivelu life history
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story