தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன் வாயால் வாழ்க்கையை தொலைத்த வடிவேலு.. மாமன்னன் படத்தில் அடக்கி வாசிக்க காரணம் என்ன.?

தன் வாயால் வாழ்க்கையை தொலைத்த வடிவேலு.. மாமன்னன் படத்தில் அடக்கி வாசிக்க காரணம் என்ன.?

Comedy actor vadivelu acting maamannan movie Advertisement

கோலிவுட் திரையுலகின் காமெடிகிங்காக பல ஆண்டுகள் இருந்தவர் வடிவேலு. இவரின் காமெடிக்காகவே பல படங்களுக்கு ரசிகர்கள் முக்கியத்துவம் அளித்தனர். பல பிரபல நடிகர்கள் அவர்களின் திரைப்படங்களில் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கால்சீட்டுக்காக காத்திருந்தார்கள்.

Vadivelu

திரைத்துறையில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே அரசியலில் இறங்கி தேவை இல்லாமல் தன் சினிமா வாழ்க்கையில் தானே ஆப்பு வைத்துக் கொண்டார். இவர் விஜயகாந்தை பற்றி தவறாக மேடையில் பேசிய காரணத்தினால் இவரை சினிமாவில் நடிக்க சில காலங்கள் தடை செய்திருந்தனர்.

இது போன்ற நிலையில், மீண்டும் நடிக்க தொடங்கிய வடிவேலு எலி,நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.  இப்படங்கள்   மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தியதால் வடிவேலு அடுத்தது என்ன செய்வதென்று தெரியாமல் சில காலங்கள் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார்.

இது போன்றநிலையில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' திரைப்படம் தயாராகி கொண்டிருக்கிறது. இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் இதுதான் என்பதால்  வடிவேலு ஒழுங்காக இப்படத்தில் நடித்துக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivelu #Mamannan #Udhaya nithi #Kollywood #movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story