"விஷாலுக்கு திமிர் கூடி விட்டது" விளாசும் காமெடி நடிகர் காதல் சுகுமார்.!
விஷாலுக்கு திமிர் கூடி விட்டது விளாசும் காமெடி நடிகர் காதல் சுகுமார்.!
"செல்லமே" திரைப்படத்தில் அறிமுகமான விஷால், இதுவரை தமிழில் 34 படங்களில் நடித்திருக்கிறார். பின்னணிப் பாடகர் மற்றும் இயக்குனராகவும் இருக்கும் இவர், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
அவரது தயாரிப்பில் துப்பறிவாளன், இரும்புத்திரை, வீரமே வாகை சூடும், கதகளி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். 2015ம் ஆண்டு நடிகர் சங்க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால், 2017ல் தயாரிப்பாளர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த "மார்க் ஆண்டனி" திரைப்படம் 100கோடி வசூல் செய்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் "காதல்" சுகுமார், " சிறிய பட்ஜெட் படங்கள் தான் என்னை போன்ற கலைஞர்களை வாழ வைக்கின்றன.
அப்படிப்பட்ட படங்களை ஊக்குவிக்காமல், படம் எடுக்க வேண்டாம் என்று கூறுவது முறையல்ல. விஷாலுக்கு திமிர் கூடியிருக்கிறது" என்று கூறியுள்ளார். முன்னதாக விஷால், "3, 4கோடியில் யாரும் படம் எடுக்க வரவேண்டாம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.