×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா யார்னு தெரியுதா? அட.. இந்த பிரபல சீரியல் ஹீரோயினாம்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகரா

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக, ரசிகர்களின் தளபதியாக வலம் வருபவர் விஜய். இவருக்கென நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதியின் பிறந்த நாள், அவரது படங்கள் வெளியாகும் நாட்கள் போன்றவற்றை அவர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடுவர்.

மேலும் விஜய் குறித்த எந்த தகவல்கள் வெளிவந்தாலும் அதனை இணையத்தில் ட்ரெண்டாக்குவர். இந்நிலையில் நடிகர் விஜய் பெண் குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நடிகை பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார்.

அதாவது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் இதயத்தை திருடாதே. இந்த தொடரில் சஹானா என்ற கதாபாத்திரத்தில், கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஹிமா பிந்து. இவரைதான் குழந்தையாக இருக்கும்போது விஜய் தூக்கி வைத்துள்ளார். இப்புகைப்படத்தை பிந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Hima bindhu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story