பாரதிராஜா உடலை பார்த்து உடைந்து போய் தலைவணங்கி கண்ணீர் விட்ட முதல்வர் விஜய்! கலங்கி உட்கார்ந்திருந்த ராதிகாவுக்கும் ஆறுதல் சொன்ன உருக்கமான வீடியோ..!!!
புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மண்வாசனையை திரைக்கு கொண்டுவந்த இயக்குநர்
1977 ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமத்து வாழ்க்கையையும் மக்களின் உணர்வுகளையும் இயல்பாக திரையில் பதிவு செய்து தனித்துவமான இடத்தைப் பெற்றார். பல வெற்றிப்படங்களை வழங்கிய அவர், தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கிய இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. மகன் மறைவுக்குப் பிறகு அவர் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்! அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!
முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
பாரதிராஜா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது இல்லத்திற்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், சில நிமிடங்கள் அங்கு அமைதியாக அஞ்சலி செலுத்தினார்.
அப்போது நடிகை ராதிகா கண்ணீருடன் அமர்ந்திருந்தார். அவரை சந்தித்த முதல்வர் விஜய் ஆறுதல் கூறியதுடன், பாரதிராஜாவின் குடும்பத்தினரிடமும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்கள் வருகை
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று வருகின்றனர். அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING : 84 வயதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்! மறக்க முடியாத படைப்பாளர் இன்று மறைந்தார்.... கண்ணீரில் ரசிகர்கள்..!!!